வரும் 29-ந்தேதி திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள்- நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்
|மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை,
தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 29-ந்தேதி திங்கட்கிழமை, காலை 10.00 மணியளவில், கோவை பீளமேடு, காளப்பட்டி சாலை "சுகுணா கலையரங்கில்", எனது தலைமையில், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, எம்.பி., சிறப்புரையாற்றிட, மாநில மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ்காந்தி இணைச் செயலாளர்கள் பூவை ஜெரால்டு, எஸ்.மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், திருமதி பூரணசங்கீதாசின்னமுத்து, திருமதி ஜெ. வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.அதுபோது மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது