< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புத்தாண்டையொட்டி, முதல்-அமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்க வரவேண்டாம்- திமுக வேண்டுகோள்
|31 Dec 2023 8:03 AM IST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை,
மழை வெள்ள பாதிப்பு காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க யாரும் வரவேண்டாம் என்று தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி தோழர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்."
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.