< Back
மாநில செய்திகள்
கக்கனின் பிறந்தநாளில் அவர்தம் பெருமையை போற்றி வணங்குகிறேன்: எடப்பாடி பழனிசாமி டுவீட்
மாநில செய்திகள்

கக்கனின் பிறந்தநாளில் அவர்தம் பெருமையை போற்றி வணங்குகிறேன்: எடப்பாடி பழனிசாமி டுவீட்

தினத்தந்தி
|
18 Jun 2022 1:33 PM IST

தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் 114 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

சுதந்திரப்போராட்ட தியாகியும், தமிழக முன்னாள் அமைச்சருமான கக்கனின் 114 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரை வணங்கி தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, "வறுமை வாட்டிய போதும் தன் செம்மை வழுவாமல், நேர்மை, எளிமை இவ்விரண்டையும் தன் அருங்குணங்களாக கொண்டு தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்த தமிழக முன்னாள் அமைச்சர்,அவருக்கு நிகர் அவரே அன்றி வேறில்லை என்று வாழ்ந்த தியாகசீலர் கக்கன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெருமையை போற்றி வணங்குகிறேன்". இவ்வாறு அவர் தன்னுடைய டுவீட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்