< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கிய கமல்ஹாசன்!
|7 Nov 2023 11:21 AM IST
இன்று நடிகர் கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நன்கொடையாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.