< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
போதைப்பொருள் தடுப்பு குறித்தவிழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
|15 Aug 2023 12:15 AM IST
கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். இதில், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஒன்றாக போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதையில்லா தமிழ்நாடு உருவாக்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.