< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பல்வேறு அமைப்புகள் சார்பில்சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
|14 April 2023 12:15 AM IST
தேனியில், பல்வேறு அமைப்புகள் சார்பில், சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
தேனியில் சமூக நல்லிணக்க பேரவை, இந்திய செஞ்சிலுவை சங்கம், தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநில செயலாளர் முஹம்மத் அமீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் சுருளிவேல், முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழு தென்மண்டல தலைவர் மகாராஜன், வைகை அரிமா சங்க தலைவர் ராஜேஷ் கண்ணா மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சமூக நன்மையான பேரவை தலைவர் முகமது சபி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.