தூத்துக்குடி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
|திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திருச்செந்தூர்:
அமலாக்க பணியகம் மற்றும் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட குழுமம் இணைந்து போதைப்பொருட்களுக்கு எதிரான உலக சாதனை விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்கள் 43, 48 சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தொடங்கி வைத்தார். போதைப் பொருட்கள் ஒழிப்பை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள், பேராசிரியர்கள் ஊர்வலமாக கல்லூரிக்கு வந்தனர்.
தொடர்ந்து கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமையில், செயலாளர் ஜெயக்குமார் முன்னிலையில், மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன் (திருச்செந்தூர்), ரகுராஜன் (குலசேகரன்பட்டினம்) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு அறிவுறுத்தலின்படி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கவிதா, அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் செய்து இருந்தனர்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய மாணவர் தரைப்படை, கப்பல்படை சார்பில், போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். விலங்கியல் துறை தலைவர் வசுமதி சிறப்புரையாற்றினார். போதைப்பொருட்களுக்கு அடிமையாவதற்கான காரணங்கள், விளைவுகள் குறித்து தரைப்படை மாணவர்கள் ஆதித்யன், சேசுதுரை கபிலன், கடற்படை மாணவர் பாலகுரு ஆகியோர் பேசினர். தூத்துக்குடி 29-வது தரைப்படை கம்பெனி ஆபீசர் கமெண்டிங் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ் உத்தரவின்பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி தேசிய மாணவர் தரைப்படை, கப்பல்படை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய தரைப்படை பிரிவு அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் செய்து இருந்தார்.