தூத்துக்குடி
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ சார்பில் 100 வாடிக்கையாளர்கள் கப்பலில் இன்ப சுற்றுலா
|தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ சார்பில் 100 வாடிக்கையாளர்கள் கப்பலில் இன்ப சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
கப்பலில் சுற்றுலா
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல ஜவுளி மற்றும் தங்கநகை விற்பனை நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை, திருச்செந்தூர், ஏரல் மற்றும் தூத்துக்குடி தமிழ்ச்சாலையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் "ஜவுளி வாங்குங்க சும்மா ஜாலியா கப்பலில் போங்க!" என்ற சிறப்பு விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக தூத்துக்குடி, திருச்செந்தூர், ஏரல் ஆகிய கிளைகளில் ஜவுளி வாங்கிய 100 வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட100 வாடிக்கையாளர்கள் சிறப்பு பஸ்கள் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் சின்னத்துரை அன்கோ சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 17-ந் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து கோர்டெலியா என்ற கப்பலில் புதுச்சேரிக்கு இன்பச்சுற்றுலா சென்றனர். தொடர்ந்து 18-ந் தேதி மீண்டும் சென்னைக்கு வந்தடைந்தனர். இந்தியாவிலேயே முதல்முறையாக ஜவுளி விற்பனை நிறுவனம் வாடிக்கையாளர்களை கப்பலில் இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
சலுகைகள்
இதுகுறித்து கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்தின் உரிமையாளர்கள் திருநாவுக்கரசு, அரிராமகிருஷ்ணன், நமச்சிவாயம், ஆகியோர் கூறும் போது, "கோடை காலத்தில் வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும் வகையில் கப்பல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாத புதிய அனுபவமாக வாடிக்கையாளர்களுக்கு இது அமைந்தது. சென்னையில் இருந்து புதுச்சேரி வரை சென்ற இந்த கப்பலில் மேஜிக் ஷோ, நாடகம், நீச்சல்குளம், சிறுவர் விளையாட்டு, ஆடல்பாடல் உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் சுற்றுலா அமைந்தது.
இந்த சுற்றுலாவுக்காக எங்களது நிறுவனம் சார்பில், கோர்டெலியா கப்பல் வரவழைக்கப்பட்டது. மேலும், சுற்றலாவில் பங்கேற்ற வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறப்பான உணவு அளிக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து எங்களது வாடிக்கையாளர்களை கவுரவப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளோம் என்று தெரிவித்தனர். கப்பல் சுற்றுலா மிகவும் மகிழ்ச்சியாக அமைந்ததாக, கே.சின்னத்துரை நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.