< Back
மாநில செய்திகள்
தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை
மாநில செய்திகள்

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

தினத்தந்தி
|
17 Jan 2024 12:23 PM IST

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர், மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அவரது திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த உருவப்படத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ஆர்.செல்வராஜ், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் மரு.கே.நாராயணசாமி, ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்