< Back
மாநில செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை சார்பில்  உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
தேனி
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

தினத்தந்தி
|
1 July 2022 7:41 PM IST

தேனி, கம்பத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது

சென்னையில் நடக்க உள்ள ஒலிம்பியாட் செஸ் போட்டியை முன்னிட்டு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேனி மாவட்டத்தில் பணியாற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான செஸ் விளையாட்டு குறித்த புத்தாக்க பயிற்சி வகுப்பு நடந்தது. உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியிலும், தேனி, பெரியகுளம் கல்வி மாவட்டங்களில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் மொத்தம் 200 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட செஸ் சங்கங்களை சேர்ந்த பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். கம்பத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள், அவர்கள் பணியாற்றும் பள்ளியில் பணியாற்றும் மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டிக்கான பயிற்சி அளிக்க உள்ளனர்.

அவ்வாறு பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி அளவிலும், வட்டார அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பிரிவில் சிறந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் நடக்கும் போது அங்கு அழைத்துச் செல்லப்பட்டு 5 நாட்கள் செஸ் பயிற்சி அளிக்கப்படும். மேலும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பிரிவிலான போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை ஒருநாள் பார்வையிடுவதற்கு அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள். இத்தகவலை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் இளங்கோ தெரிவித்தார்.

மேலும் செய்திகள்