< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

தினத்தந்தி
|
27 Oct 2023 10:11 AM IST

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஊதியமாக ரூ.6,750 வழங்கிடுதல், அரசு துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிடுதல், காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைத்தல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில மைய முடிவின்படி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு நடத்தினர்.

இதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காவலன் கேட் பகுதியில், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஓய்வுபெற்ற பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.காஞ்சீபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாமஸ் இளங்கோவன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் பக்கிரி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, கோஷங்களை எழுப்பியும், காஞ்சீபுரம்- வந்தவாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற பணியாளர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மறியல் போராட்டம் நடைபெறுவதையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்