தூத்துக்குடி
தூத்துக்குடியில் தமிழ் அமைப்புகள் சார்பில்கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
|தூத்துக்குடியில் தமிழ் அமைப்புகள் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட தமிழ் அமைப்புகள் சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு உலக திருக்குறள் மைய மாவட்ட செயலாளர் மோ.அன்பழகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் காசி, பொன்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கி.அரங்கநாயகி வரவேற்று பேசினார்.
கலைஞரின் திருக்குறள் கனவுகள் என்ற தலைப்பில் மோகனராசு, தமிழ்த்திரையுலகில் கருணாநிதியின் திரைப்பட பணிகள் குறித்து நெல்லை செயந்தா, கருணாநிதியின் கவிதைகள் என்னும் தலைப்பில் தமிழ் மாமணி, தமிழ்ப்பணி இதழ் ஆசிரியர் திருவள்ளுவர், கருணாநிதியின் சமூகநீதிகள் என்னும் தலைப்பில் பால்ராசேந்திரம், கருணாநிதியின் சங்கத்தமிழ் குறித்து கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதியின் குறளோவியம் குறித்தும் மோ.அன்பழகன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பேசும் கலை வளர்ப்போம் என்ற தலைப்பில் பேசிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.