< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விஜயதசமி திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள் - அண்ணாமலை
|24 Oct 2023 10:41 AM IST
அனைவர் வாழ்விலும் நல்லதே நடக்கவும், நலம் செழிக்கவும், வளம் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
வியஜயதசமி திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
புதிய பாதை, புதிய முயற்சிகளைத் தொடங்கும் திருநாளான விஜயதசமி தினத்தன்று, அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவர் வாழ்விலும் நல்லதே நடக்கவும், நலம் செழிக்கவும், வளம் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.