< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
பொன்னூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி சார்பில்நாட்டு நலப்பணி திட்ட முகாம்
|27 Dec 2022 3:42 PM IST
வந்தவாசி
பொன்னூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
வந்தவாசியை அடுத்த பொன்னூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி சார்பில் இளங்காடு கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சிறப்பு முகாம் தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக மாணவர்களின் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு கல்வியாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். பேரணியை ராமகிருஷ்ணா படம் சிறப்பாசிரியர் சதானந்தம் தொடங்கி வைத்தார். பள்ளி ஆசிரியர்கள் ஹேமலதா, சிவராமன், கலாம் பவுண்டேசன் நிர்வாகி கேசவராஜ், நூலகர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வல்த்தில் பங்கேற்ற மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பத்மநாபன் நன்றி கூறினார்/