< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கே.என்.சுப்பாராஜ் கல்வியில் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

கே.என்.சுப்பாராஜ் கல்வியில் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

எட்டயபுரம்:

எட்டயபுரம் கே.என்.சுப்பாராஜ் கல்வியில் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பாரதியார் மணிமண்டபத்தில் தூய்மைப்பணி நடந்தது. இதில் மண்டபத்திலிருந்த செடிகள், குப்பைகளை அகற்றி தூய்மை பணி மேற்கொண்டனர். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் பாரதி மணிமண்டபத்தில் இருந்து தொடங்கி மெயின் ரோடு வழியாக பஸ் நிலையம் சென்று மீண்டும் மணிமண்டபத்தை வந்தடைந்தது. இதில் பங்கேற்ற மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜா, உதவி பேராசிரியர்கள் கார்த்திகை செல்வி, ராஜேஷ், சொப்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்