< Back
மாநில செய்திகள்
கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு கல்வி-மருத்துவ உதவித்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மாநில செய்திகள்

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு கல்வி-மருத்துவ உதவித்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தினத்தந்தி
|
19 Sept 2022 6:07 AM IST

நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பட்டுள்ளதாக தி.மு.க. தெரிவித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

"கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2005-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.5 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகையாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்