< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கழுகுமலை பள்ளி சார்பில்விழிப்புணர்வு ஊர்வலம்
|11 Oct 2023 12:15 AM IST
கழுகுமலை பள்ளி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை ஆறுமுகம்நகர் விமல் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு பள்ளி தாளாளர் தங்கத்தாய் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை பள்ளி முதல்வர் வெள்ளத்துரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கழுகுமலை தேவர் சிலை முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலம் அரண்மனை வாசல் தெரு, கீழ பஜார், தெற்கு ரத வீதி வழியாக பள்ளிக்கூடத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷமிட்டு சென்றனர். வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.