< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
|30 Jun 2023 12:15 AM IST
இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில் வி.வி.டி. நித்தியானந்தம் நினைவு சேம்பர் சேவை சேமநலநிதியில் இருந்து தற்போது பிளஸ்-2 படிக்கும் 19 சிறந்த மாணவ, மாணவிகளுக்கான கல்வி கட்டண உதவித் தொகை வழங்கும் விழா மற்றும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 4 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சங்க அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் உதவித்தொகையை வழங்கினார். சங்க தலைவர் டி.ஜான்சன் வரவேற்று பேசினார். செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம், செயலாளர் டி.ஆர்.கோடீசுவரன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் சங்க துணைத்தலைவர் கிருஷ்ணாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் சி.அருள்ராஜ் சாலமோன் நன்றி கூறினார்.