< Back
மாநில செய்திகள்
இந்தியன் வங்கி சார்பில்திருச்செந்தூர் காஞ்சி பள்ளி மாணவிக்கு பாராட்டு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

இந்தியன் வங்கி சார்பில்திருச்செந்தூர் காஞ்சி பள்ளி மாணவிக்கு பாராட்டு

தினத்தந்தி
|
1 Jun 2023 12:15 AM IST

இந்தியன் வங்கி சார்பில் திருச்செந்தூர் காஞ்சி பள்ளி சாதனை மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி செ.துர்கா கடந்த 2021-2022-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்தார். இந்த மாணவியை பாராட்டி இந்தியன் வங்கி சார்பில் பரிசு கோப்பை மற்றும் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளி முதன்மை முதல்வர் செல்வவைஷ்ணவி தலைமை தாங்கினார். முதல்வர் ஜீனத் முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி நெல்லை மண்டல மேலாளர் ஜெயபாண்டியன் மாணவி துர்க்காவை பாராட்டி கோப்பை மற்றும் ரூ.15 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கினார். வங்கி மண்டல வளர்ச்சி அலுவலர் சுஜா மாணவிக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

நிகழ்ச்சியில், மாணவியின் பெற்றோர் செல்வகுமார், ஹேமா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சாதனை மாணவியை பள்ளி தாளாளர் டாக்டர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர். இந்தியன் வங்கி திருச்செந்தூர் கிளை மேலாளர் செந்தில்வேல்முருகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்