< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
விவசாயிகள் சார்பில் மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை
|16 Sept 2023 12:15 AM IST
சாத்தான்குளத்தில் விவசாயிகள் சார்பில் மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை நடத்தப்பட்டது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் பகுதியில் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் சார்பில் மும்மத பிரார்த்தனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநில இந்து முன்னணி பொதுச் செயலாளர் அரசுராஜா, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் லூர்து மணி, வட்டார மனித நேய நல்லிணக்க பெருமன்ற செயலாளர் மகாபால்துரை, படுக்கப்பத்து விவசாயிகள் சங்கத் தலைவர் சரவணன், பங்கு தந்தை அன்புச்செல்வன், படுக்கப்பத்து பெரியமுத்தாரம்மன் கோவில் பூஜாரி சந்துரு, உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.