< Back
மாநில செய்திகள்
கனரா வங்கி சார்பில்கடனுதவி வழங்கும் முகாம்
தேனி
மாநில செய்திகள்

கனரா வங்கி சார்பில்கடனுதவி வழங்கும் முகாம்

தினத்தந்தி
|
18 Aug 2023 12:15 AM IST

தேனி அல்லிநகரத்தில் கனரா வங்கி சார்பில் கடனுதவி வழங்கும் முகாம் நடந்தது.

தேனி அல்லிநகரம் கனரா வங்கி கிளையில், பெரியகுளம், கடமலைக்குண்டு, வடபுதுப்பட்டி, கொடுவிலார்பட்டி, தேவதானப்பட்டி, ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கனரா வங்கி கிளைகள் சார்பில் கடனுதவி வழங்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு உதவி பொதுமேலாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். இதில், 7 கிளைகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு வீட்டுக்கடன், வாகனக்கடன், கல்விக்கடன் உள்பட பல்வேறு கடன் வழங்கப்பட்டது. கடனுதவியை கோட்ட மேலாளர் ராஜேஷ், தனிநபர் கடன் பிரிவு மேலாளர் பிரியா, முதன்மை மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வழங்கினர். இதில், வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்