< Back
மாநில செய்திகள்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில்  விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சிகள்:  கலெக்டர் தொடங்கி வைத்தார்
தேனி
மாநில செய்திகள்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சிகள்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
29 Nov 2022 12:15 AM IST

மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில், விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில், எச்.ஐ.வி., எய்ட்ஸ், பால்வினை நோய் தொற்று, ஏ.ஆர்.டி. சிகிச்சை, ரத்த தானம் மற்றும் காசநோய் குறித்து மக்களிடம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களிலும் 2 கலைக்குழுக்கள் மூலம் 40 விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த கலை நிகழ்ச்சிகள் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் டாக்டர் ராஜபிரகாஷ், தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் அனுமந்தன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு திட்ட மேலாளர் முகமது பாரூக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்