< Back
மாநில செய்திகள்
பழுதாகி நின்ற லாரி மீது லோடு வேன் மோதி வியாபாரி பலி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பழுதாகி நின்ற லாரி மீது லோடு வேன் மோதி வியாபாரி பலி

தினத்தந்தி
|
29 May 2023 12:15 AM IST

நாலாட்டின்புத்தூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது லோடு வேன் மோதியதில் வியாபாரி பலியானார்.

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது லோடு வேன் மோதியதில் வியாபாரி பலியானார்.

லாரி மீது மோதல்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் இருந்து மரக்கன்றுகள் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு செல்வதற்காக லோடு வேன் நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. வேனை பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த சோமம் என்பவரது மகன் டிரைவர் கிசன் (வயது 34) என்பவர் ஓட்டினார்.

நேற்று அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை கடந்து நாலாட்டின்புத்தூர் பாலம் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது.

வியாபாரி பரிதாப சாவு

இதில் வேனில் வந்த பேச்சிப்பாறையை சேர்ந்த வியாபாரி நெல்சன் (62) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேன் டிரைவர் கிசன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்ததும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இறந்த நெல்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் கிசனுக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாமக்கல் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (48) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்