< Back
மாநில செய்திகள்
வருகிற 31-ம் தேதி தென்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
மாநில செய்திகள்

வருகிற 31-ம் தேதி தென்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
25 Jan 2024 1:53 PM IST

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (25.01.2024 முதல் 30.01.2024 வரை) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

(31.01.2024) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை:- நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு/அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்