< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கஞ்சா செடி வளர்த்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|2 July 2022 10:14 PM IST
கஞ்சா செடி வளர்த்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடமலைக்குண்டு அருகே உள்ள காந்திகிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). தண்டியகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (36). இவர்கள் 2 பேரும், ஊசிமலை கரடு என்ற இடத்தில் கஞ்சா செடி வளர்த்ததாக வருசநாடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளது.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே கலெக்டர் முரளிதரனிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் பழனிசாமி, பெருமாள் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.