< Back
மாநில செய்திகள்
விபத்தில் சிக்கிய ஆம்னிபஸ், ஆட்டோ
திருச்சி
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கிய ஆம்னிபஸ், ஆட்டோ

தினத்தந்தி
|
17 Sept 2023 1:03 AM IST

ஆம்னிபஸ் ஆட்டோ மோதிய விபத்தில் ௪ பேர் படுகாயம் அடைந்தனர்.

கோவையில் இருந்து தேவகோட்டை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் நேற்று காலை திருச்சி விமான நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று ஆட்டோ குறுக்கே வந்ததால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பில் மோதியது. பின்னர் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பயணிகள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்