< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விருதுநகர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து.. உயிரிழப்பு தவிர்ப்பு
|2 April 2023 8:32 AM IST
ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து தீப்பிடித்ததை கவனித்த ஓட்டுநர், உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றினார்.
ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் பேருந்து முழுவதுமாக எரிந்து தீக்கிரையானது.