< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விருதுநகர் அருகே ஆம்னி பேருந்து கவிந்து விபத்து - 2 பேர் பரிதாப பலி
|8 April 2024 2:54 AM IST
விருதுநகர் அருகே ஆம்னி பேருந்து கவிந்த விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து ஒன்று கவிழ்ந்து தற்போது கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
தென்காசியில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தற்காலிக பாலத்தில் கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த கோர விபத்து சம்பவத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.