< Back
மாநில செய்திகள்
சென்னை-மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து- லாரி மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

சென்னை-மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து- லாரி மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
29 Jan 2023 3:03 AM IST

சென்னை-மார்த்தாண்டம் புறவழிச்சாலையில் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

சென்னை,

சென்னை-மார்த்தாண்டம் புறவழிச்சாலையில் மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மாயமாகி உள்ளனர். மேலும் இந்த விபத்தில் லாரியில் ஏற்றிச்செல்லப்பட்ட 4 மாடுகளும் உயிரிழந்தது.

மேலும் செய்திகள்