< Back
மாநில செய்திகள்
பிரதமர் உரையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் விடுபட்டது இயல்பாக நடந்திருக்கலாம் - கரு.நாகராஜன்
மாநில செய்திகள்

'பிரதமர் உரையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் விடுபட்டது இயல்பாக நடந்திருக்கலாம்' - கரு.நாகராஜன்

தினத்தந்தி
|
29 Feb 2024 10:13 PM IST

பெயர் விடுபட்டதை ஒரு பிரச்சினையாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கரு.நாகராஜன் தெரிவித்தார்.

சென்னை,

பிரதமர் உரையில் தி.மு.க. எம்.பி. கனிமொழியின் பெயர் விடுபட்டது இயல்பாகவே நடந்திருக்கலாம் என தமிழக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"மேடைகளில் தலைவர்கள் பேசும்போது சில சமயங்களில் சிலரது பெயர்கள் விடுபட்டு விடுவது வழக்கமானதுதான். அதை ஒரு பிரச்சினையாக நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் பேசும்போது தி.மு.க. எம்.பி. கனிமொழியின் பெயர் விடுபட்டது இயல்பாக நடந்திருக்கலாம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்