< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி: ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி
|8 Aug 2023 7:16 AM IST
கள்ளக்குறிச்சியில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.