< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கான ஒலிம்பியாட் திறனறி தேர்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கான ஒலிம்பியாட் திறனறி தேர்வு

தினத்தந்தி
|
10 April 2023 1:21 AM IST

மாணவர்களுக்கான ஒலிம்பியாட் திறனறி தேர்வு நடந்தது.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஒரு பள்ளியில் ஒலிம்பியாட் என்ற தலைப்பில் 2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான திறனறி தேர்வு நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் முன் பதிவு செய்து, இந்த தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பள்ளியின் தாளாளர் ராம்குமார், பள்ளி முதல்வர் ஹேமா, தேசிய பாரா ஒலிம்பிக் கூட்டமைப்பின் மாநில தலைவர் மக்கள் ராஜன் ஆகியோர் தேர்வு மையத்தை ஆய்வு செய்தனர். இந்த தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண் பெறும் முதல் நபருக்கு ஆண்ட்ராய்டு எல்.இ.டி. டி.வி.யும், வகுப்பு வாரியாக முதல் மதிப்பெண் பெறுபவருக்கு ஆங்கிலமொழி அகராதியும், 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை முதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கடிகாரமும் பரிசாக வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்பட்டு 16-ந் தேதி பள்ளி வளாகத்தில் பரிசுகள் வழங்கப்படுகிறது. தேர்விற்கு குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்