< Back
மாநில செய்திகள்
முதியவா் குடும்பத்தினர் மீது தாக்குதல்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

முதியவா் குடும்பத்தினர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
22 July 2023 12:30 AM IST

மணல்மேடு அருகே முதியவா் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மணல்மேடு;

மணல்மேடு அருகே முதியவா் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரச்சினை

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கிடாத்தலைமேடு கிராமம் மேலத்தெருவை சேர்ந்த இளையராஜா. இவருடைய மனைவி அருள்மொழி. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அருள்மொழிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் உள்ளதாக கூறி இளையராஜாவுக்கும் அவருடைய மனைவி அருள்மொழிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் அருள்மொழி தனது குழந்தைகளுடன் திருவெண்காட்டில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

வெளிநாட்டுக்கு சென்றாா்

இதன்பின் இளையராஜா வேலை தொடர்பாக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் அருள்மொழி தனது 2 குழந்தைகளுடன் கிடாத்தலைமேட்டில் உள்ள அவரது கணவர் வீட்டுக்கு சென்றாா். அப்போது அங்கு இருந்த இளையராஜாவின் தந்தை பன்னீர்செல்வம், தனது மகன் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் இங்கு வரலாம் என்று தனது மருமகள் அருள்மொழியிடம் கூறி திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

கைது

இது குறித்து அருள்மொழி, ஆகாஷிடம் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ஆகாஷ், அவரது தந்தை ஆசைத்தம்பி, சகோதரர் அபினாஷ் ஆகியோர் பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்று பன்னீர்செல்வம், அவரது மனைவி அமராவதி, மற்றொரு மகன் ரமேஷ் ஆகியோரை உருட்டு கட்டை, அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து பன்னீர்செல்வம் (75) கொடுத்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் (22), ஆசைத்தம்பி (53), அபினாஷ் (19) ஆகிய3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்