< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
லாரி மோதி மூதாட்டி பலி
|22 Aug 2023 12:21 AM IST
நெல்லையில் லாரி மோதி மூதாட்டி பலியானார்.
நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.