< Back
மாநில செய்திகள்
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் மூதாட்டி பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் மூதாட்டி பலி

தினத்தந்தி
|
20 March 2023 2:26 PM IST

மீஞ்சூர் அருகே மகன் கண்முன்னே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக பலியானார்.

விபத்தில் தாய் பலி

மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கம் நதியா நகரில் வசித்து வருபவர் ஜோதி (வயது 60). இவரது மகன் மணிக்குமார் (36). இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தாய் ஜோதியுடன் மோட்டார் சைக்கிளில் வடசென்னை அனல் மின் நிலைய 100 அடி சாலையில் உள்ள வல்லூர் 4 முனை சந்திப்பில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட ஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த மணிக்குமார் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடினார்.

டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு

இந்தநிலையில், சாலை பாதுகாப்பு பணியில் இருந்த செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த மணிக்குமாரை மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து, விபத்துக்கு காரணமானதப்பி ஓடிய லாரி டிரைவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்