< Back
மாநில செய்திகள்
மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி
தேனி
மாநில செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி

தினத்தந்தி
|
11 Oct 2022 2:54 PM GMT

தேவதானப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் தங்கம்மாள் (வயது 70). இவர், பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் செங்குளத்துப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேவதானப்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி ஷேக் முகமது (38) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தங்கம்மாள் மற்றும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஷேக் முகமது ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தங்கம்மாளை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷேக் முகமது வத்தலக்குண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி தங்கம்மாள் பரிதாபமாக இறந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்