< Back
மாநில செய்திகள்
கார் மோதி மூதாட்டி பலி
தென்காசி
மாநில செய்திகள்

கார் மோதி மூதாட்டி பலி

தினத்தந்தி
|
19 Jan 2023 12:15 AM IST

கடையம் அருகே கார் மோதி மூதாட்டி பலியானார்.

கடையம்:

துப்பாக்குடி அருகில் உள்ள ராவுத்தபேரி இந்திராநகர் நடுத்தெருவைச் சேர்ந்த அண்ணாமலை என்பவருடைய மனைவி ராமசுந்தரி (வயது 65). இவர் நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்றுவிட்டு தோரணமலை ஆர்ச் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார், ராமசுந்தரி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசுந்தரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த வெய்க்காலிப்பட்டியை சேர்ந்த ராம நாடார் மகன் பால்ராஜ் என்பவர் மீது கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்