< Back
மாநில செய்திகள்
கார் மோதி மூதாட்டி பலி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கார் மோதி மூதாட்டி பலி

தினத்தந்தி
|
26 Oct 2023 12:15 AM IST

கீழையூர் அருகே கார் மோதி மூதாட்டி பலி

வேளாங்கண்ணி:

கீழையூர் அருகே திருமணங்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 70). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் திருமணங்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி வந்த கார், நாகம்மாள் மீது மோதியது . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்