< Back
மாநில செய்திகள்
சரக்கு வேன் மோதி மூதாட்டி பலி
ஈரோடு
மாநில செய்திகள்

சரக்கு வேன் மோதி மூதாட்டி பலி

தினத்தந்தி
|
19 Sept 2023 3:30 AM IST

சரக்கு வேன் மோதி மூதாட்டி பலியானாா்.

சென்னிமலை

சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோடு டி.எம்.எம்.புரத்தை சேர்ந்தவர் சண்முகம். அவருடைய மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் நேற்று இரவு ஈங்கூர் ரோட்டில் உள்ள மாரியப்பா நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெருந்துறை சிப்காட்டில் இருந்து கால்நடை தீவனங்களை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக சரஸ்வதி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்