< Back
மாநில செய்திகள்
விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி சாவு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
26 Sept 2022 1:52 AM IST

திசையன்விளையில் விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி இறந்தார்.

திசையன்விளை:

திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 64). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திசையன்விளை- இடையன்குடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற திசையன்விளை மன்னர் ராஜா கோவில் தெருவை சேர்ந்த சாமுவேல் மகன் டேஜஸ், ராஜம்மாள் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவா் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்