< Back
மாநில செய்திகள்
விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
15 Sept 2023 1:29 AM IST

கல்லிடைக்குறிச்சி அருகே விபத்தில் காயமடைந்த மூதாட்டி இறந்தார்.

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்த கருப்பன் மனைவி கருப்பி (வயது 70). இவர் கடந்த 10-ந் தேதி கல்லிடைக்குறிச்சி ெரயில் நிலையம் அருகே சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதியதில் அவா் காயமடைந்தார். உடனடியாக அவருக்கு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் முதலுவி வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் கருப்பி உயிரிழந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்