< Back
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து பணம் மோசடி; காவலாளி கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து பணம் மோசடி; காவலாளி கைது

தினத்தந்தி
|
5 Aug 2023 1:40 AM IST

திசையன்விளை அருகே மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து பணம் மோசடி செய்த காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:

திசையன்விளை அருகே பெருங்கனாங்குளத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி சந்திரா (வயது 60). அணைக்கரையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பாதுகாப்பு இல்லத்தில் வேலை செய்து வருகிறார். இவர் ஜூன் மாதம் திசையன்விளையில் உள்ள வங்கி ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு ஏ.டி.எம். காவலாளியாக பணியாற்றிய ஜோதிநகரத்தை சேர்ந்த சேகரன் (45) என்பவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.9 ஆயிரம் எடுத்து தரும்படி கூறியுள்ளார். பணத்தை எடுத்து கொடுத்த அவர் அவரது ஏ.டி.எம். கார்டை கொடுக்காமல் வேறு கார்டை கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று சந்திரா ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அவரது கணக்கில் பணம் இல்லை என்று பதில் வந்துள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். அவரது ஏ.டி.எம். கார்டை பரிசோதித்ததில் அது போலி கார்டு என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சந்திரா திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கடந்த மாதம் பணம் எடுக்க வந்தபோது காவலாளி தனசேகரன் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து ஏமாற்றி அவரது கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்தது தெரியவந்தது. போலீசர் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ 20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்