< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பாம்பு கடித்து மூதாட்டி பலி
|16 Oct 2023 11:14 PM IST
பாம்பு கடித்து மூதாட்டி பலியானார்.
நச்சலூர் அருகே உள்ள தெற்குப்பட்டி குருணிக்காரத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 75). இந்தநிலையில் பழனியம்மாள் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தார். இதையடுத்து பழனியம்மாளை மகன் காத்தான் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு பழனியம்மாளை பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரை பாம்பு கடித்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காத்தான் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.