< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே ரெயில் மோதி மூதாட்டி சாவு
|31 July 2022 10:46 AM IST
திருவள்ளூர் அருகே ரெயில் மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூரில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விவரங்கள் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.