< Back
மாநில செய்திகள்
ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
திருச்சி
மாநில செய்திகள்

ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

தினத்தந்தி
|
6 Oct 2023 2:47 AM IST

ரெயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்தார்.

தண்டவாளத்தில் பிணம்

திருச்சி பொன்மலை மற்றும் திருச்சி டவுன் ரெயில் நிலையத்துக்கு இடையே முத்துமணி டவுன் அருகே நேற்று முன்தினம் மாலை ரெயில் தண்டவாளத்தில் பெண் பிணம் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அந்த பெண், ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூக்கில் தொங்கிய டிரைவர்

*சிறுகனூர் அருகே உள்ள கொணலை மெயின் ரோட்டை சேர்ந்தவர் வரதராஜ். கொத்தனார். இவரது மகன் வசந்தகுமார்(22). இவர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், தற்கொலை செய்யப்போவதாக அடிக்கடி கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர், மாடியில் உள்ள அவரது அறைக்கு சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த வரதராஜ், அந்த அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வசந்தகுமார் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வசந்தகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*முசிறி அருகே உள்ள தும்பலம் கிராமம் கிழக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(55). சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் வீட்டில் வந்தபோது, அவரது மனைவி கவிதாவை(42) காணவில்லை. இதனால் உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, மாயமான கவிதாவை தேடி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்