< Back
மாநில செய்திகள்
ஈத்தாமொழி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ஈத்தாமொழி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
30 May 2023 3:29 AM IST

ஈத்தாமொழி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி ,இறந்தார்.

ஈத்தாமொழி:

ஈத்தாமொழி அருகே உள்ள நெடுவிளையைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி கலாவதி (வயது 60). சம்பவத்தன்று மாலை கலாவதி கடையில் பால் வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது ஈத்தாமொழியில் இருந்து மேலகிருஷ்ணன்புதூர் நோக்கி மேலராமன்புதூரைச் சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கலாவதி மீது மோதியது. இதில் கலாவதியும், மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டனும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கலாவதியை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், மணிகண்டன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதற்கிடையே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கலாவதி தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். மணிகண்டனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்