< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
19 Sept 2022 2:20 AM IST

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

நாகர்கோவில்:

நாகர்கோவில் புன்னைநகர் குருசடி சாலையை சோ்ந்தவர் தேவசகாயம். இவருடைய மனைவி சிசிலி (வயது 85). இவர் நேற்று மதியம் புன்னை நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சிசிலி படுகாயமடைந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சிசிலி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்