< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
சேலம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
16 Aug 2022 1:08 AM IST

தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானாார்.

தலைவாசல்:-

தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வரலட்சுமி (வயது 67). இவர் தலைவாசலில் ஒரு தனியார் திருமண மண்டபம் எதிரே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வரலட்சுமி பலியானார்.

Related Tags :
மேலும் செய்திகள்