< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த மூதாட்டி சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
13 July 2022 9:46 PM IST

மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த மூதாட்டி சாவு

குலசேகரம்:

குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவருடைய மனைவி நபிசாத் (வயது65). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக விலவூர்கோணம் பகுதியைச் சேர்ந்த சனல் (21) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், நபிசாத் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த நபிசாத் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலையில் நபிசாத் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்