< Back
மாநில செய்திகள்
கார் மோதி மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கார் மோதி மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு

தினத்தந்தி
|
26 Dec 2022 12:30 AM IST

கார் மோதி மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அயன்பேரையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி உலகநாயகி(வயது 87). ரத்தினசாமி ஏற்கனவே இறந்துவிட்டார். உலகநாயகி நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் உலகநாயகி மீது மோதியதில் படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உலகநாயகி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்